tamilnadu

img

டோரியன் புயலால் சிதைந்த பஹாமஸ் நாடு

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்த்துள்ள பஹாமஸ் நாடு டோரியன் புயலால் முற்றிலுமாக சிதைந்துள்ளது.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பஹாமஸ் நாடு, சுமார் 350 கி.மீ வேகத்தில் வீசிய டோரியன் புயலால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக மையம் கொண்ட புயல் 13,000 வீடுகளையும் முற்றிலுமாக சேதப்படுத்தியுள்ளது. மேலும் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இடுப்பளவில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில் மின் இணைப்பு, தகவல் தொடர்பு, குடிநீர் வசதி துண்டிக்கப்பட்டு வீடுகளை இழந்து மக்கள் தவிக்கின்றனர்.இப்புயலினால் 7 பேர் பலியாகியுள்ளதாகவும்,மேலும் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்புள்ளதாக காணப்படுகிறது.

தற்போது டோரியன் புயல் மெல்ல நகர்ந்து அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கடற்கரை அருகில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல அறிவிக்கப்பட்டுள்ளனர்.  
 

 
 

;