tamilnadu

img

ஈரானை நோக்கி அமெ.போர்க்கப்பல்

வாஷிங்டன், மே 7-விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள்மற்றும் குண்டு வீசும் போர் விமானங்களைஈரானை நோக்கி அமெரிக்கா அனுப்பியுள்ளது.அமெரிக்கப் படையினர் மீதோ, அதன்கூட்டாளிகளின் படையினர் மீதோ ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி தரப்படும் என்று அமெரிக்க அதிகாரி ஜான் போல்டன் தெரிவித்துள்ளார்.“யு.எஸ்.எஸ். ஆப்ரஹாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க்கப்பல் தாக்குதல் குழுவும், குண்டு வீச்சு படையும், அமெரிக்காவின் மத்திய கட்டளைப் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுதெளிவான செய்தியை ஈரான் அரசுக்குஅனுப்பும்” என்று போல்டன் தெரிவித்துள்ளார்.அதிபர் ஒபாமா காலத்தில் 2015-ம்ஆண்டு அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட ஆறு நாடுகள் ஈரானுடன் செய்துகொண்ட பன்னாட்டு அணு ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கா மட்டும்ஒரு தரப்பாக வெளியேறியது. ஆயினும் பிற ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தத்தில் நீடிக்கின்றன.அதனால், ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது.தொடர்ந்து மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தது.

;