tamilnadu

img

பீப், போர்க் உணவை எடுத்துச் செல்வதல்ல முதன்மைப் பிரச்சனை... சம்பள உயர்வுக்காகவே நாங்கள் போராடுகிறோம்!

கொல்கத்தா:
இந்தியாவின் முன்னணி தனியார் உணவு விநியோக நிறுவனமாக ‘சொமாட்டோ’ விளங்குகிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவை, அவர்களின் இருப்பிடத்திற்கேகொண்டுசென்று வழங்குவது இதன் பணியாகும். ‘சொமாட்டோ’ இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டிருந்தாலும், உலகம் முழுவதும் 24 நாடுகளில் கிளைகளைப் பரப்பியிருக்கிறது. 8 கோடிக்கும்அதிகமானோருக்கு உணவுச் சேவைகளை வழங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். 

அண்மையில், ‘சொமாட்டோ’விடம், உணவு ஆர்டர் செய்த ஜபல்பூரைச் சேர்ந்த இந்துத்துவா பேர்வழி ஒருவர், பின்னர் திடீரென ‘எனக்கான உணவை இஸ்லாமியர் எடுத்து வருவதாக இருந்தால், அந்த உணவே வேண்டாம்’ என்று ஆர்டரைத் திரும்பப் பெற்றார்.அப்போது, தனது இஸ்லாமிய ஊழியர் பக்கம் உறுதியாக நின்ற ‘சொமாட்டோ’நிறுவனம், “உணவிற்கு மதங்கள் இல்லை” என்றும், “உணவே ஒரு மதம்”என்றும் இந்துத்துவா பேர்வழிக்கு பதிலடி கொடுத்தது. சொமாட்டோவின் இந்த
நடவடிக்கை பரவலான பாராட்டைப் பெற்றது.இந்நிலையில்தான், சொமாட்டோ நிறுவனமானது, இந்து மதத்தைச் சேர்ந்தஊழியர்களிடம் மாட்டிறைச்சி உணவையும்  (Beef), இஸ்லாமிய ஊழியர்களிடம் பன்றியிறைச்சி உணவையும் (Pork)
கட்டாயப்படுத்தி வாடிக்கையாளர் களுக்கு கொடுத்து அனுப்புவதாகவும் புகார் எழுந்தது.மேற்குவங்க மாநிலம் ஹவுரா நகரைச் சேர்ந்த சொமாட்டோ ஊழியர்கள், இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். முதல்நாளில் ஹவுராவைச் சேர்ந்த பாஜக மண்டலத் தலைவர் சஞ்சய் குமார் சுக்லாவும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் பின்வாங்கிக் கொண்டார். 

எனினும், கடந்த ஒரு வாரமாக, மதநம்பிக்கையை முன்னிறுத்தும் போராட்டமாகவே சொமாட்டோ ஊழியர்களின் போராட்டம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.ஆனால், சம்பள உயர்வுக்காகவே தாங்கள் போராடுவதாகவும், சில அமைப்புகளும், ஊடகங்களும்தான் இதனை வெறுமனே உணவுப் பிரச்சனையாகவும், மதப்பிரச்சனையாகவும் மாற்றி வருவதாகவும் ‘சொமாட்டோ’ ஊழியர்கள் கொந்தளித்துள்ளனர்.இதுதொடர்பாக சுஜித் குமார் குப்தாஎன்ற ஊழியர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். “எங்களுடைய ஊழியர்களில் பெரும்பாலானோர் சரியான சம்பளம் கிடைக்கவில்லை என்று தான் போராட் டம் நடத்தினார்கள். போராட்டத்தின் முக்கிய காரணமே அதுதான்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.“பீப் மற்றும் போர்க் உணவுகளை எடுத்துச் செல்வது ஊழியர்கள் மத்தியில் ஒரு பிரச்சனையாக உள்ளது என்றாலும், முக்கிய பிரச்சனை என்னவோ சம்பளம் குறித்ததுதான். ஆனால் ஊடகங்கள் ‘பீப் மற்றும் போர்க்’ விவகாரத்தை மட்டுமே பூதாகரமாக காட்டிக் கொண்டிருக்கின்றன” என்றும் தெரிவித்துள்ளார்.

“நான் இந்த நிறுவனத்தில் பணியில் சேரும்போது, ஆர்டர் எடுக்கின்றோமோ இல்லையோ, வாரத்திற்கு ரூ. 4 ஆயிரம்சம்பாதித்து விட முடியும்; ஒவ்வொரு டெலிவரிக்கும் 80 முதல் 100 ரூபாய் வரை சம்பாதித்து விடலாம்; ஊக்கத் தொகையும் (இன்செண்டிவ்) கிடைக்கும்; ஆனால் தற்போது ஒரு ஆர்டருக்கு வெறும் ரூ. 25 மட்டுமே தருகிறார்கள்; ஆரம்ப காலத்தில் மாதத்திற்குரூ. 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பாதிக்க முடியுமென்றால், தற்போது மதியம் 12 மணி துவங்கி நள்ளிரவு வரைஉழைத்தாலும் வெறும் ரூ. 15 ஆயிரம் மட்டுமே மாத வருமானமாக கிடைக்கிறது” என்று சுஜித் குமார் பிரச்சனைகளை அடுக்கியுள்ளார். இவர், இரண்டுவருடங்களுக்கும் மேலாக சொமாட்டோவில் பணி புரிந்து வருகிறார்.சுஜித் குமாரைப் போன்றே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மௌசின் அக்தர் என்பவர் கூறுகையில், “எங்களின்சம்பளம் குறைக்கப்பட்டது குறித்து புகார் அளித்தோம். ஆனால் அவர்களோ (சொமாட்டோ), வருமானம் போதவில்லை என்றால் தாராளமாக வேலையை விட்டு நின்றுவிடுங்கள்” என்றுகூறுகிறார்கள் என கவலை தெரிவித்துள்ளார்.