இந்தியாவை தொடர்ந்து மிரட்டிவரும் டிரம்ப் நிர்வாகம்
ரஷ்யாவுடன் வணிகம் மேற்கொள்ளக் கூடாது என இந்தியாவை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து மிரட்டி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளின் மீது டிரம்ப் கடுமையான வரிகளை விதிப்பார் என அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மிரட்டல் விடுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் அவர் “இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு நான் சொல்வது இதுதான். இந்தப் போர் (ரஷ்யா –உக்ரைன்) தொடர்வதற்காக நீங்கள் ரஷ்யாவிடம் இருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய்யை தொடர்ந்து வாங்கினால், நாங்கள் உங் களை அழித்துவிடுவோம், உங்கள் பொ ருளாதாரத்தை நசுக்கப் போகிறோம்” என்றார். உக்ரைன் மீதான போருக்கு தேவையான நிதியை கச்சா எண்ணெய் விற்பனை மூலமாக ரஷ்யா பெற்று வரு கிறது. ரஷ்யாவிடம் இருந்து அதிகளவு எண்ணெய் வாங்கும் நாடுகளாக இந்தி யா, சீனா, பிரேசில் உள்ளன. இதனால் அமெரிக்கா ரஷ்யாவுடனான எண்ணெய் வர்த்தகத்தை இந்த நாடுகள் நிறுத்த வேண்டும் என தொடர்ந்து மிரட்டி வருகிறது. மேலும் 50 நாட்களுக்கு உக்ரைனு டன் ரஷ்யா அமைதி உடன்படிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் போட்ட உத்தரவை ரஷ்யா உதாசீனம் செய்துவிட்டது. அதே நேரத்தில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு முன் போரில் எங்கள் இலக்கை நாங்கள் அடைவோம் எனவும் ரஷ்யா தெரிவித்து வருகிறது. இதனால் ரஷ்யாவுடன் நெருங்கிய வர்த்தக உறவுகளை கொண்டுள்ள சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா வின் கச்சா எண்ணெய்யை வாங்கக் கூடாது. இல்லை என்றால் அந்நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிப்பேன் என சில நாட்களுக்கு முன் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். தற்போது அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம், டிரம்பின் மிரட்ட லை உறுதிப்படுத்தியுள்ளார். இவர் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடு கள் மீது 500 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என அமெரிக்க நாடாளு மன்றத்தில் மசோதா ஒன்றை முன்மொழி ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.