education

img

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

இந்தாண்டு மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
2025 - 2026 ஆம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார் பட்ட படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
மொத்தம் 72,743 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள நிலலையில் கடந்த ஆண்டைப் போலவே நடப்பாண்டும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வுகள் ஜூலை 30 ஆம் தேதி தொடங்குகிறது.