education

img

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்குக்கான முதல் பொதுத்தேர்வு இன்று தொடங்கி மார்ச் 9 வரை நடைபெறுகிறது.
சிபிஎஸ்இ இந்த ஆண்டுமுதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடைபெறும் அறிவித்திருந்தது.
2025-2026ஆம் கல்வி ஆண்டுக்கான  10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான முதல் பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. 10 ஆம் வகுப்புக்கு  மார்ச் 7 வரையும் 12ஆம் வகுப்புக்கு மார் 9 வரையும் தேர்வுகள் நடைபெறுகின்றன.
இரண்டாவது பொதுத்தேர்வு மே 15 முதல் ஜூன் 1 வரை நடைபெறவுள்ளது. தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க விரும்புபவர்கள் இரண்டாவது தேர்வு எழுதலாம் எனவும், அதேநேரம் முதலாவது பொதுத்தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும் என சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.
தேர்வு மையங்களுக்கு மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்சாதனங்களைக் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனுமதி அட்டை (Admit Card) மற்றும் பள்ளி அடையாள அட்டையை கட்டாயமாக எடுத்துவர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.