education

img

சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்.17-ஆம் தேதி முதல் ஏப்.9-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதேபோல், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் பிப்.17ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறுகிறது. இந்த நிலையில், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
cbse.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் தங்கள் login தகவல்கள் உள்ளிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.