states

img

“பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகப் படுகொலை” நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் மீண்டும் போராட்டம்

“பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகப் படுகொலை”

  நாடாளுமன்றத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் மீண்டும் போராட்டம்

புதுதில்லி பாஜகவிற்கு ஆதரவாக இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில், இதுவரை 50 லட்சத்திற் கும் அதிகமான வாக்குகளை நீக்கி யுள்ளது. அதாவது ஒரு தொகுதி க்கு தேர்தல் ஆணையம் சராசரி யாக 23,000 வாக்குகளை நீக்கி யுள்ளது. இது பாஜகவிற்கு ஆதர வான நடவடிக்கை என எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதனை கண்டித்து நாடாளு மன்ற மழைக்காலக் கூட்டத் தொ டரின் 2ஆம் நாளான செவ்வாய்க் கிழமை அன்று  “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் “மகர் துவார்” எனும் நாடாளுமன்ற வாயிலில் கூடி பீகா ரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத் தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து மழைக்காலக் கூட்டத் தொடரின் 4ஆம் நாளான வியாழக்கிழமை அன்று நாடாளு மன்ற வளாகத்தில் தேர்தல் ஆணை யத்தை கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலை மையில் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் மீண்டும் போராட்டம் நடத்தினர். காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்), இடது சாரி மற்றும் திரிணாமுல் காங்கி ரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி., க்கள் போராட்டத்தில் பங்கேற்ற னர். போராட்டத்தின் போது “இந்தி யா” கூட்டணி எம்.பி.,க்கள்,”பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜன நாயகப் படுகொலை” என முழக்கங்களை எழுப்பினர்.