மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் வரலாற்றில் முதல்முறையாக 2 இந்திய வீராங்கனைகள் மோதவுள்ளனர்.
மகளிர் உலக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டி நாளை(ஜூன் 26) ஜார்ஜியாவில் நடைபெறவுள்ளது. அரையிறுதிப்போட்டியில் சீன வீராங்கனைகளை வீழ்த்தி இந்திய வீராங்கனைகளான கோனேரு ஹம்பி(32)மற்றும் திவ்யா தேஷ்முக்(19) ஆகிய இருவரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
மேலும் மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் வரலாற்றில் இறுதிப்போட்டியில் 2 இந்திய வீராங்கனைகள் மோதுவது இதுவே முதல்முறையாகும். இதன்மூலம் இந்தியாவுக்கு உலகக் கோப்பை கிடைப்பது உறுதியாகியுள்ளது.