states

தீக்கதிர் விரைவு செய்திகள்

கர்நாடகாவில்  யுபிஐ-க்கு எதிராக வியாபாரிகள் போராட்டம் ஸ்கேனர்கள் கிழித்தெறியப்பட்டது  

கர்நாடக மாநிலம் காவேரி மாவட் டத்தில் உள்ள பசவ நகரைச் சேர்ந்தவர் ஷங்கர் கவுடா ஹடி மணி (51). காய்கறிக் கடையை நடத்தி வரும் இவருக்கு, அண்மையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ் ஒன்றை அனுப்பினர். அதில்,“கடந்த 4 ஆண்டு களில் யுபிஐ டிஜிட்டல் முறையில் ரூ.1.63 கோடி வரை பரிவர்த்தனை செய்துள்ளீர்கள். இதற்கு நீங்கள் ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஷங்கர் கவுடாவைப் போல கர்நாடகாவில் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு வியா பாரிகளுக்கு லட்சக்கணக்கில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இதுதெடர்பான விஷயம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ கர்நா டகாவின் காவேரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் யுபிஐ-க்கு எதிராக போ ராட்டம் தொடங்கியுள்ளது. பெரும்பா லான வியாபாரிகள் யுபிஐ பண பரி வர்த்தனையை முற்றிலுமாக நிறுத்தி யுள்ளனர். சில இடங்களில் வியாபாரி கள், இளைஞர்கள் யுபிஐ வேண்டாம் என்று கூறி, அதற்கான ஸ்கேனர்கள் கிழித்தெறிந்து வருகின்றனர். இத னால் யுபிஐ-க்கு எதிராக போராட்டம் மாநிலம் முழுவதும் பரவ வாய்ப்புள் ளது. முன்னதாக ஜிஎஸ்டி நோட்டீஸை கண்டித்து புதன்கிழமை அன்று காவேரி மாவட்டத்தில் மாநில அளவிலான வியா பாரிகள் போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பீகார் தேர்தலை மகா கூட்டணி புறக்கணிக்கும் தேர்தல் ஆணையத்திற்கு  ஆர்ஜேடி எச்சரிக்கை

வாக்காளர் பட்டியல் திருத் தத்தை தேர்தல் ஆணை யம் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையி லான “மகாகத்பந்தன் கூட்டணி (மகா கூட் டணி)” தேர்தலை புறக்கணிக்கத் தயங் காது என பீகார் எதிர்கட்சித் தலைவரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி எச்ச ரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக சட்டமன்ற வளா கத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “தேர்தல் வெற்றியாளர் யார் என்பது ஏற் கனவே தீர்மானிக்கப்பட்டிருக்கும் போது, அப்படி ஒரு தேர்தலை நடத்துவ தால் என்ன பயன் இருக்கிறது? பூத்- லெவல் அதிகாரிகள் வாக்காளர்கள் சார்பாக தங்கள் கையொப்பங்களையும் கட்டைவிரல் ரேகைகளையும் கணக்கெ டுப்பு படிவங்களில் இடுகிறார்கள். படி வங்கள் குப்பைக் காகிதம் போல பயன் படுத்தப்படுகின்றன. இதனை சுட்டிக் காட்டும் பத்திரிகையாளர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்கின்ற னர். தேர்தல் ஆணையம் ஆளும் கட்சி யின் அரசியல் கருவியாக செயல்படு கிறது. இதுதொடர்பாக எங்கள் கூட்ட ணியில் உள்ள அனைத்து தலைவர்களி டமும் நாங்கள் பேசுவோம்” என அவர் தெரிவித்தார்.