ராஷ்டிரிய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ் ஜா
ஜனநாயகத்தில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் ஜனநாயகத்துக்கு பாதுகாப்பு இருக்காது. அதனால் பீகார் விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்
ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்திருப்பது நல்ல விஷயம். மாநிலங்களவைக்கு கிடைத்த அவைத் தலைவர்களிலேயே மிக மோசமான அவைத்தலைவர் அவர்தான். அரசாங்கத்துக்கு பிடிக்காத எந்த விவாதத்தையும் அவர் அவைக்குள் அனுமதித்ததில்லை. அந்தளவுக்கு ஒன்றிய அரசுக்கு சேவகம் செய்தவர். மக்களவை தலைவரோ தன்கரை விட மோசமானவர். அடுத்த குடியரசு துணைத் தலைவரை இன்னும் மோசமாகக் கொண்டு வருவார்கள்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா
ஜகதீப் தன்கர் இறுதியாக உரை நிகழ்த்த எந்த ஏற்பாடும் இல்லை. பிரியாவிடை நிகழ்ச்சியும் இல்லை. எல்லாம் சரியாகவும் இயல்பாகவும் நடப்பதாக எப்படி நம்ப முடியும்?
ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்
குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கருக்கு மாநிலங்களவையில் பிரியாவிடை நிகழ்ச்சி கூட நடக்கப் போவதில்லை. திங்களன்று மாலை 6 மணிக்கு, அவரின் குழு அடுத்த நாளுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்துக் கொண்டிருந்தது. இரவு 9 மணிக்கு அவர் ராஜினாமா செய்திருக்கிறார். 3 மணி நேரங்களில் என்ன மாறிப் போனது? அதிகார அரசியல் போட்டியின் பரிதாபங்கள்.