போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்ச்அமைப்புகளில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்தவொரு பிரச்சனைகளும் கண்டறியப்படவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 14 முதல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானம், பழுது நீக்கப்பட்டு திங்களன்று அங்கிருந்து புறப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சைபர் மோசடிகுற்றங்களை தடுக்க சைபர் ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டுவது பற்றி ஆய்வு செய்ய நிபுணர் கமிட்டி அமைக்கவும் முடிவு செய்துள்ளது.
மும்பை ரயில் குண்டுவெடிப்பில் தொடர்புடை யதாக கூறப்படும் 12 பேரை, அம்மாநில உயா்நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை வரும் 24ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.