tamilnadu

கிராம மக்களின் மறியல் போராட்டம் வெற்றி டாஸ்மாக் கடையை அகற்ற அதிகாரிகள் உறுதி

உளுந்தூர்பேட்டை. நவ, 27- பொதுமக்களுக்கு இடையூறாக உளுந்தூர்பேட்டை நகரில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டுமென அப்பகுதி யில் வசிக்கும் ஆண்களும், பெண்களும் புதனன்று (நவ.27) காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உளுந்தூர்பேட்டை நகரில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள (கடை எண் 11469) அரசு மதுபானக் கடையால் அப்பகுதி யில் உள்ள ஏராளமான பெண்களும், பொது மக்களும் பெரும் பாதிப்புக்குள் ளாகி வரு கின்றனர். இதன் விளைவாக கடையை மூடக்கோரி தொடர்ந்து பலமுறை ஆர்ப்பாட்  டம், சாலை மறியல் என போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அக்கடை செயல்படும் கட்டிட உரிமையாளர் கி.பால முருகன் என்பவரும் கடந்த ஜூன் மாதம்  கடையை காலி செய்து தர வேண்டுமென தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைத்து துறை  அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியுள்ளார். ஆனால் கடையை அப்புறப்படுத்துவதற்கு டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை.  இதனால் உடனடியாக கடையை காலி  செய்து தராவிட்டால் குடும்பத்துடன் விழுப்பு ரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிப்பேன் எனவும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் டாஸ்மாக் கடை  இல்லாத நேரங்களில் அப்பகுதியில் சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பவர் களை தேடி மது அருந்துபவர்கள் அலை கின்றனர். இதனால் அருகிலுள்ள தெருக்க ளில் வசிக்கும் குடும்பத்தினர் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என இதுவரை ஏழு முறை சாலை மறியல்  போராட்டத்தை இப்பகுதி மக்கள் நடத்தி யுள்ளனர். இந்நிலையில் புதனன்று காலை இந்த டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினர் ஆகியோர் அங்கு வந்து மறியலில் ஈடு பட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அக்கடையின் கண் காணிப்பாளர் “வரும் நவம்பர் 31 ஆம் தேதி யோடு கடையை அப்புறப்படுத்தி மூடுவது” என்று எழுத்து மூலமாக எழுதிக் கொடுத்து உடன்படிக்கை ஏற்பட்டதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.