தஞ்சாவூர், நவ.28- வாகனங்கள் செல்ல முடியாதபடி, குண் டும்குழியுமாக உள்ள தஞ்சை - கும்ப கோணம் சாலையை பராமரிக்காத நெடுஞ் சாலைத்துறையைக் கண்டித்தும், போக்கு வரத்துக்கு ஏற்ற வகையில் உடனடியாக சாலையை சீரமைத்துத் தர வலியுறுத்தியும், தஞ்சை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செவ்வா யன்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் கும்பகோணம், பாபநாசம் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்திலும் முற்றுகைப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கும்பகோணம் நெடுஞ் சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலு வலகத்தில் நெடுஞ்சாலை துறை அதிகாரி கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட் டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், கே.அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சா.ஜீவபாரதி, சி.நாக ராஜன், நகரச் செயலாளர் செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் பாபநாசம் முரளி ஆகி யோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னர்.
இதேபோல் திங்களன்று தஞ்சை பன கல் கட்டிடத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் சமாதானப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில் குமார், தஞ்சை ஒன்றியச் செயலா ளர் கே.அபிமன்னன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் என்.குருசாமி, என்.சரவணன், மாநக ரக் குழு உறுப்பினர்கள் கரிகாலன், ராஜன் மற்றும் எஸ். கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அரசுத் தரப்பில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் எஸ். சத்யன், நெடுஞ்சா லைத்துறை இளநிலை பொறியாளர் இரா. பழனியப்பன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், கும்பகோணம் - தஞ்சாவூர் நான்கு வழிச்சாலையில் விடு பட்டுள்ள பகுதிகளான, அணைக்கரை, திருப்பனந்தாள், சோழபுரம், கொர நாட்டுக்கருப்பூர் மற்றும் தாராசுரம் முதல் ஆதி மாரியம்மன் கோயில் வரையுள்ள, கைவிடப்பட்ட பகுதிகளை ஒருமுறை மேம் பாடு செய்து, மாநில நெடுஞ்சாலையிடம் ஒப்படைக்கும் திட்டத்தின் வைப்பு நிதி பெறப்பட்டு, பணிகள் தற்போது துவங்கப் பட்டுள்ளது. பணியின் காலம் ஒரு வருட மாகும். இந்தப் பணியின் போது ஏற்படும் பள்ளங்களை தற்காலிகமாக சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்” என அதிகாரி கள் தெரிவித்தனர். இதையேற்று, செவ்வாயன்று நடை பெறுவதாக இருந்த முற்றுகைப் போராட் டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக மாவட் டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தெரி வித்துள்ளார்.