பேராவூரணி, டிச.15- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம், நெல்லி யடிக்காடு மற்றும் மரக்காவ லசை கிராமத்தில், மின் இணைப்பு இன்றி வசித்து வரும் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். மணக்காடு ஊராட்சியில் பொதுமக்க ளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் காத்திருப்பு போராட் டம் நடத்தப்படும் என அறி விக்கப்பட்டது. இந்நிலையில், பேராவூ ரணி வட்டாட்சியர் அலு வலகத்தில் வியாழனன்று வட்டாட்சியர் த.சுகுமார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற் றது. இதில், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணி யன், வருவாய் ஆய்வாளர் கள், கிராம நிர்வாக அலு வலர்கள், சேதுபாவாசத்தி ரம் வட்டார வளர்ச்சி அலு வலர்கள், மணக்காடு ஊரா ட்சி மன்றத் தலைவர் விஜய குமார், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். மனோகரன், சேதுபாவா சத்திரம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.எம்.வீரப்பெருமாள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில், ‘‘நெல்லடிக்காடு கிரா மத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து, மின் வசதி இன்றி சிரமப்படும் 19 குடும்பங்களுக்கும் உடனடி யாக மின் இணைப்பு வழங்க வேண்டும். மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண் டும். நெல்லியடிக்காடு பாங்கிராங்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி கட்டடத்தை புதுப் பித்து தர வேண்டும். மேலமணக்காடு காட் டாறு வடகரை 1,200 மீட்டர் தூர சாலையினை அமைத்து தரவேண்டும். மணக்காடு ஊராட்சியில் வெறிநாய் தொல்லைகளை கட்டுப் படுத்த வேண்டும். மரக் காவலசை கிராமத்தில், சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் 4 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க வேண் டும். மரக்காவலசை கிரா மத்தில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்ட இடத்தினை ஆய்வு செய்து பயனாளி களை அங்கு குடியமர்த்திட நடவடிக்கை எடுக்க வேண் டும்’’ என கோரிக்கை வைக் கப்பட்டது. இக்கோரிக்கை கள் விரைவில் நிறைவேற் றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இத னால், காத்திருப்பு போராட் டம் கைவிடப்பட்டது.