tamilnadu

img

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு! - சு.வெங்கடேசன் எம்.பி

ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து பாஜக அரசு உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது என்று சு.வெங்கடேசன் எம்.பி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர். இதே முறையில் ஹரியானாவிலும் இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள். 
கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.