districts

ஒரத்தநாடு மதுக்கடையை மூட அதிகாரிகள் உறுதி போராட்டம் ஒத்திவைப்பு

தஞ்சாவூர், மார்ச் 28-  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு முத்தம்  பாள்புரம் கிராமம் மன்னார்குடி முக்கம் பிரிவு சாலையில், பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் இடையூறாக, இயங்கி வரும் அரசு டாஸ்மாக் மதுபானக்  கடையை அடைத்து பூட்டு போடும் போராட்  டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்  குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், ஒரத்தநாடு வட்டாட்சி யர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சுரேஷ்  தலைமையில் பேச்சுவார்த்தை திங்கள் கிழமை நடைபெற்றது.  கட்சியின் ஒன்றியச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ்குமார், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மோகன்தாஸ், ஜெய் சங்கர், ரமேஷ், அரங்கசாமி, பாஸ்கர் ஆகியோ ருடன் துணை ஆட்சியர், டாஸ்மாக் மாவட்ட மேலாளர், ஒரத்தநாடு காவல் உதவி  ஆய்வாளர், மண்டல துணை வட்டாட்சியர்,  ஒரத்தநாடு சரக வருவாய் ஆய்வாளர், முத்  தம்பாள்புரம் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, “குறிப்பிட்ட அந்த மதுபானக் கடை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் மூடப்படும்” என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.