கடலூர், ஆக. 19- ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் முன் அவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சி.என். பாளையத்தில் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒப்பாரி போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கடலூர் வருவாய் வட்டாட்சியர் பூபாலசந்திரன் தலைமையில், தனி வட்டாட்சியர் முன்னிலையில் அதிகாரி கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீர்குப்பம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பில் வீடுகளை கட்டியுள்ள மக்க ளுக்கு பட்டா வழங்க இயலாது என்றும், மாற்று இடம் தேர்வு செய்து பட்டா வழங்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தெரு விளக்குகள், சாலை களை சீரமைக்கவும், மாதா கோவில் கல்ல றையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவது என்றும், கல்லறைக்கு செல்லும் பாதையை சிமெண்ட் சாலையாக மாற்றவும் தீர்மானிக்கப்பட்டது. புதிய நீர்த்தேக்கத் தொட்டி, ஆதிதிராவிட மக்களுக்கு காரியம் கொட்டகை, எம்.ஜி.ஆர், நகர் சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தரப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, பொருளாளர் ஆர். கிருஷ்ண மூர்த்தி, ஒன்றியப் பொருளாளர் ஆர். தமிழரசன், ஒன்றியத் தலைவர் ஏ.வைத்தி லிங்கம், கோதண்டபாணி, நடராஜன், பாவாடை சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.