விழுப்புரம், ஜூன் 12- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் விபத்துகள் நடைபெறாமல் இருக்க செய்ய வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவல கத்தில் நடைபெற்றது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட சாலை விபத்துகள் குறித்தும், விபத்துகளை குறைக்க எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடை பெறும் இடங்களை கண்டறியப்பட்டு 30 இடங்களில் ஒளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டும், பேரிகார்டு அமைத்தும் விபத்து தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் 40 விபத்துகள் குறைந்து ள்ளது. மேலும் விபத்துகளை குறைக்க தேசிய நெடுஞ்சாலைக ளில் எல்.இ.டி. பல்புகளுடன் கூடிய உயர்கோபுர மின்விளக்கு கள், மையக்கோடுகள் அமைக்க நகாய் நிறுவனம் (தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.