tamilnadu

8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு,டிச 17- ஈரோடு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித்துறை தேர்தலுக்கு 8293 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள் ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கும், 183 பஞ்சாயத்து யூனியன் வார்டுகளுக்கும், 225 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும், 2097 கிராம பஞ்சா யத்து வார்டுகள் என 2524 பொறுப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் எதிர்வரும், டிச.27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட முழுவதும் வேட்பு மனுதாக்கல் முடிவில், 125 மாவட்ட பஞ்சாயத்து வார்டு களுக்கும், 1087 பஞ்சாயத்து யூனியன் வார்டுகளுக்கும், 1341 கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கும், 5740 கிராம பஞ்சாயத்து வார்டுகள் என 8293 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.