விழுப்புரம்.ஜன.2- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் அன்னிய நாட்டுப் பொருள்களை தீயிட்டு எரிக்கும் போராட்டம், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அன்னிய வர்த்தக ஆதிக்கத்துக்கு எதிரான, காந்திய அறப்போர் 2020-ஜனவரி 1-ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு, அன் றைய தினம் தமிழகமெங்கும் அன்னிய நாட்டுப் பொருள் கள் எரிப்புப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர வைத் தலைவர் த.வெள்ளை யன் அறிவித்திருந்தார். அதன்படி, வணிகர் சங்கங்களின் விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டக் கிளை சார்பில் செஞ்சி கூட்டு சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு த. வெள்ளையன் தலைமை வகித்தார். அப்போது, அன் னிய நாட்டுப் பொருள்களை வணிகர்கள் தீ வைத்து கொளுத்தினர். இந்தப் போராட்டத்தில் செஞ்சி தொகுதி எம்எல்ஏ. மஸ்தான் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.