வெம்பக்கோட்டை, ஜூன் 10- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே மூடப் பட்ட பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயா ரிக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் இரு தொழிலா ளர்கள் தீக்காயமடைந்தனர். இதையடுத்து, ஆலை உரிமை யாளர் மற்றும் ஆலையை குத்தகைக்கு எடுத்து பட்டாசு தயா ரித்தவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெம்பக்கோட்டை அருகே உள்ளது பேர்நாயக்கன்பட்டி. இங்கு சுப்புராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சில ஆண்டுகளாக இந்த ஆலையானது மூடப்பட்டுள் ளது. ஆனால், இந்த ஆலையை கீழக்கோதை நாச்சியார் புரத்தைச் சேர்ந்த கவியரசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில், ஞாயிறன்று அங்கு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிவகாசி பாரதி நகரைச் சேர்ந்த சோலைராஜ் (37), அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் (47) ஆகியோர் தீக்காயமடைந்தனர். இந்நிலையில், சுப்புராஜ், கவியரசன் ஆகியோரை வெம்பக்கோட்டை போலீ சார் கைது செய்தனர். மேலும், பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு காயமடைந்த கணேசன், சோலைராஜ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.