விருதுநகர்:
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு பெண்உட்பட நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.
விருதுநகர்-சிவகாசிசாலையில் உள்ளது குருமூர்த்தி நாயக்கன்பட்டி. இங்கு விஷால் என்பவருக்குச் சொந்தமான துர்காகலர் மேட்ச் பட்டாசு ஆலைஉள்ளது. மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம்பெற்ற இந்த ஆலையில் சாதாரண மற்றும் கலர் மத்தாப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். சனிக்கிழமை மாலை, 4.30 மணிக்கு மத்தாப்புகளை காய வைத்த இடத்தில் திடீரென தீப்பற்றியது. கண் இமைக்கும் நேரத்தில் தீ பரவியதில் இரு அறைகள் வெடித்துச் சிதறின.இந்த விபத்தில் ஜி.என்.பட்டியைச் சேர்ந்தவீராசாமி(55), பஞ்சவர்ணம் (50), ஆமத்தூரைச் சேர்ந்த புது ராஜா (40), முத்துலாபுரத்தைச் சேர்ந்த நடராஜன் (50)ஆகியோர் படுகாயமடைந்தனர்.தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத் தனர். காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.