யுபிஐ பணப் பரிவர்த்தனைகளிந் நேரம் குறைப்பு உள்ளிட்ட புதிய விதிகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கூகுள் பே, ஃபோன்பே போன்ற யுபிஐ செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளின் நேரம் (Request Pay / Response Pay) 30 வினாடிகளில் இருந்து 15 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஐ பரிவர்த்தனையின் நிலையை (Transaction Status) தெரிந்துகொள்ளும் நேரமும், பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பணம் திரும்பப்பெறுவதற்கான (Transaction Reversal) நேரமும், 30 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. யுபிஐ மூலம் பணம் பெறுபவரின் முகவரி சரிபார்ப்பு (Validating Address) நேரம் 15 வினாடிகளில் இருந்து 10 வினாடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.