சர்வதேச புலிகள் தினம் உலகம் முழுவதும் இன்று(ஜூலை 29) கடைப்பிடிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29 அன்று உலக புலிகள் தினம் (International Tiger Day) கொண்டாடப்படுகிறது. புலிகள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பதால், அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில் 2010ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற புலிகள் உச்சி மாநாட்டில் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
புலிகள் காட்டின் உயிரியல் சமநிலையைப் பாதுகாக்கும் முக்கிய உயிரினம். ஆனால் சட்டவிரோத வேட்டையாடல், காடு அழிப்பு, மனிதர்கள்-புலிகள் மோதல் ஆகிய காரணங்களால் அவற்றின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளது.
புலிகள் வாழிடங்களைப் பாதுகாப்பது, வேட்டையாடலைத் தடுக்க உலகளாவிய நடவடிக்கைகள், மக்கள் விழிப்புணர்வு மற்றும் பங்கேற்பை ஊக்குவித்தல் போன்ற முக்கிய நோக்கங்களுக்காக இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.