விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் வரும் ஜூலை 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூன் 21-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ஆம் தேதி செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூன் 26-ஆம் தேதி கடைசி நாள். ஜூலை 13-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி உள்பட நாடு முழுவதும் 7 மாநிலங்களில் மொத்தம் 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.