நாகப்பட்டினம், ஜன.20- சென்னை மாநகரில், ஜனவரி-23 முதல் 27 வரை நடைபெறும் சி.ஐ.டி.யு. 16-வது அகில இந்திய மாநாட்டை நோக்கி, கீழவெண் மணி- தியாக பூமியிலிருந்து வெண்மணி ஜோதிப் பயணம், திங்கட்கிழமை அன்று எழுச்சியோடு புறப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பயணக்குழுத் தலைவரும் சிஐடியு மாநிலச் செயலாளருமாகிய சி.ஜெய பால் தலைமை வகித்தார். வெண்மணி தியாகிகள் நினைவாலயம் முன்பு அமைக்கப் பட்டுள்ள 44 அடி உயரமுள்ள சி.ஐ.டி.யு. கொடிக்கம்பத்தில், எழுச்சி முழக்கங்க ளுக்கிடையே, சி.பி.எம். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பி னருமான வி.மாரிமுத்து, சி.ஐ.டி.யு. கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, தியாகிகள் நினைவு ஸ்தூபியின் முன் நடைபெற்ற தியாகிகள் ஜோதி வழங்கும் நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு. மாவட்டப் பொருளாளர் ஆர்.ரவீந்திரன் வர வேற்புரையாற்றினார். தென் மண்டல ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்கக் கூட்ட மைப்பின் துணைத் தலைவர் கே.சுவாமி நாதன் துவக்கவுரையாற்றி, தியாக ஜோதியை எடுத்துக் கொடுக்க, சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி பெற்றுக் கொண்டார்
அதனைத் தொடர்ந்து, தியாகிகள் நினை வாலயம் முன்பு நடைபெற்ற சுடர்ப் பயணப் புறப்பாடு நிகழ்ச்சியில் சி.பி.எம். மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி சிறப்புரை யாற்றினார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ், வி.தொ.ச. மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டாலின், சி.பி.எம். கீழ்வே ளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சிகளில் சி.ஐ.டி.யு. சார்பில் நாகை மாவட்டத் தலைவர் பி.ஜீவா, திருவா ரூர் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், தஞ்சை மாவட்டத் தலைவர் து.கோவிந்த ராஜ், புதுகை மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பி னர் என்.எம்.அபுபக்கர் மற்றும் கே.தங்க மணி, இரா.மாலதி, ம.கண்ணன், முகமது அலிஜின்னா, பி.முனியாண்டி, சு.சிவகுமார், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவகுமார், எஸ்.மோகன் இங்கர்சால், சு,மணி, எம்.பி.கே.பாண்டியன், யு.ராமச் சந்திரன், பி.என்.பேர்நீதி ஆழ்வார், எஸ்.பால சுப்பிரமணியன், என்.அசோக்ராஜ், கே.கல்யாணி, பி.சண்முகம், என்.அஷோக் ராஜ், பி.சண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். வாழ்த்து முழக்கங்களோடு, வெண்மணி நினைவாலய முகப்பிலிருந்து புறப்பட்ட வெண்மணி தியாகி சுடர்ப் பயணக் குழுவிற்கு, நாகை மாவட்டத்தில் தேவூர், நாகை நகரம், வேளாங்கண்ணி, மேலப் பிடாகை, ஆலங்குடி அகிய இடங்களில் சிறப்பு மிகு வரவேற்பு அளிக்கப்பட்டது.