வேலூர், ஜூன் 1-குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தை தோல் பதனிடும் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என வாடற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வடாற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே தினக் கூட்டம் ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் நேய.சுந்தர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் எஸ். பி.ராஜேந்திரன், ஆம்பூர் நகரப் பொருளாளர் என்.சம்பத், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்ற மாவட்டத் தலைவர் ஜி.ஏ.அரங்கநாதன், நகரச் செயலர் எஸ்.தென்னவன், நிர்வாகி விமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தமிழக அரசு அறிவித்தபடி தோல் பதனிடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 160, வீதம் 2018 ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு அனைத்துத் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படு வதுபோல தோல் பதனிடும் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் தமிழக அரசின் அடையாள அட்டை, விபத்துக் காப்பீடு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.