தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் (TNPSC) மூலமாக நியமிக்கப்பட உள்ள இளநிலை பயிற்சி அலுவலர்கள் பணியிடங் கள், ஒன்றிய அரசின் பயிற்சி இயக் குனரக வழிகாட்டலின்படி, தொழிற் பயிற்சி தகுதி பெற்றவர்களுக்கும் பட்டய/இளங்கலை படிப்பை முடித்தவர்களுக்கும் 1:1 விகிதத் தில் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங்கத்தினர் மாநி லம் முழுவதும் திங்களன்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் கால வாக்குறுதிகளின் அடிப்படையில், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பயிற்றுநர்கள் மற் றும் உதவியாளர்களை நிரந்தர மாக்க வேண்டும், 2005 ஆம் ஆண் டில் பணியில் சேர்ந்த ஊழியர்க ளின் தொகுப்பூதிய காலத்தை பணி வரன் முறையில் கொண்டுவர வேண்டும், பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களை கலந்தாய்வு முறையில் வழங்க வேண்டும், சான்றிதழ் தாரர்களுக்கு வழி காட்டுதலின் அடிப்படையில் முதன்மை பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன் நிறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளான அலுவ லர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தொழிற் பயிற்சி அலு வலர் சங்கத்தின் சார்பில் தருமபுரி கடத்தூர் ஐடிஐ முன்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் திற்கு மாவட்டத் தலைவர் ம.முனி ராஜ் தலைமை வகித்தார். இதில், மாநிலப் பொருளாளர் திருநாவுக் கரசு, மாவட்டச் செயலாளர் சாமிநா தன், மாவட்டப் பொருளாளர் அன்பழ கன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி உள்ளிட்டோர் வாழ்த்திப்பேசினர். சேலம் சேலம் மாவட்டத்தின் கோரி மேடு பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையம் முன்பு, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கிளைச் செயலாளர் ஸ்ரீபதி தலைமை வகித்தார். இதில், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், கூட்டுறவு சங்க மாவட்ட துணைத் தலைவர் சர வணன், மோட்டார் வாகன பராம ரிப்பு துறை மாநில நிர்வாகி முரு கப்பெருமாள், ஓய்வுபெற்றோர் சங்க மாவட்ட துணைத் தலைவர் அருள் மொழி உள்ளிட்டோர் உரை யாற்றினர். மேட்டூர் தொழிற் பயிற்சி நிலையம் முன் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் தலைவர் பழனிசாமி தலைமையி லும், கரும்துறை பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் சுந்தர், கிளை தலை வர் கணபதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கோவை கோவை, வால்பாறை, ஆனை கட்டி உள்ளிட்ட இடங்களில் தமிழ் நாடு தொழிற் பயிற்சி அலுவலர் சங் கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கோவை தொழிற்பயிற்சி நிலை யத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத் திற்கு கிளைத் தலைவர் ஆர்.கோவிந்தராஜன் தலைமை வகித் தார். மூத்த உறுப்பினர் ஆர்.ராம சாமி கோரிக்கை விளக்கி உரை யாற்றினார். பி.குமார் நன்றி கூறி னார். இதேபோன்று, வால்பாறை கிளை ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் நடராஜன், செய லாளர் கோபாலகிருஷ்ணன் மற் றும் வைரவேல் உள்ளிட்டோர் பங் கேற்றனர். ஆனைகட்டி கிளையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கிளை தலைவர் டி.கிருஷ்ணகுமார், செயலாளர் பி.கார்த்திகேயன், பொருளாளர் கே.சிவசக்தி உள்ளிட் டோர் உரையாற்றினர்.