tamilnadu

சிபிஎம் இன்று போராட்டம்

வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறு!  சிபிஎம் இன்று போராட்டம்

இஸ்லாமியர்களைத் துன்புறுத்தும் வகையிலும், இஸ்லாமி யர்களுக்கும் பிற மதத்தினருக்கும் உள்ள சகோதரத்துவத்தைச் சீர்குலைக்கும் வகையிலும், ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (ஏப்ரல் 17) தொடர் முழக்கப்  போராட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 41 இடங்களில் நடைபெறும் இந்தப் போராட்டங்களில், மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் - தென் சென்னையிலும், அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் கே. பாலகிருஷ்ணன் - நாகப்பட்டினத்திலும், உ. வாசுகி - மத்திய சென்னையிலும், மூத்த தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் - வட சென்னையிலும் கலந்து கொள்கின்றனர். மத்தியக்குழு உறுப்பினர்கள் என். குணசேகரன் - செங்கல்பட்டிலும், கே. பாலபாரதி - தேனியிலும் தர்ணாவில் கலந்து கொள்கின்றனர்.