இது என் வாழ்நாள் பெருமை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெகிழ்ச்சி
மாற்றுத் திறனாளிகளுக் கான மசோதாவை தாக் கல் செய்து முதல்வர் பேசியதா வது: “‘எல்லார்க்கும் எல்லாம்’ என்று சொல்கிறோம். ஆதிதிரா விடர், பழங்குடியினர், பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர், பெண்கள், விளிம்பு நிலை மக்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் என்று ‘குரலற்றவர்களின் குர லாக’ இந்த ஆட்சி இருக்க வேண் டும் என்றுதான் நாங்கள் செயல் பட்டு வருகிறோம். மாற்றுத்திறனாளிகள் நல னில் அக்கறையுடன் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த அரசு, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இந்த துறைக்கான நிதியை ரூ.1,432 கோடியாக, அதாவது இரண்டு மடங்கு உயர்த்தியி ருக்கிறது. மாற்றுத்திறனாளி களுக்கு கருணை அடிப்படை யில் மட்டுமல்ல; உரிமை அடிப்ப டையில் நாம் திட்டங்களைத் தீட்டி வழங்கிக் கொண்டிருக்கி றோம்.
இது வாழ்நாள் பெருமை...
அந்த வகையில் தான், தற்போதைய சட்ட முன்வடிவு கள் மூலம், கடைக்கோடியில் இருக்கக்கூடிய மாற்றுத் திற னாளிகளுக்கும், அவர்கள் வாழும் ஊரிலேயே மரியாதை கிடைக்கும். இந்த அந்தச் சட்ட முன்வடிவுகளை முன்மொழி வதை நான் எனது வாழ்நாள் பெருமையாகக் கருதுகிறேன்” என்று குறிப்பிட்டார்.