tamilnadu

img

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இது!

வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு இது!

பெ.சண்முகம் வரவேற்பு

“தமிழ்நாடு முழு வதும் உள்ள  பல லட்சக்கணக் கான மாற்றுத் திற னாளிகளின் ஜன நாயக குரல் உள்  ளாட்சி அமைப்பு களில் எதிரொலிக் கும் வகையில், அவர் களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கூடிய சட்டமுன்வடிவை சட்டமன்றத்தில் முத லமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார். இது  உண்மையிலேயே வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என்பதில் மாற்றுக் கருத்  துக்கு இடமே கிடையாது. மாற்றுத் திற னாளிகளுக்கென ஒரு இடஒதுக்கீட்டை கொண்டுவந்து, அதற்கு சட்ட அங்கீ காரம் வழங்கும் வகையில் மசோதா  தாக்கல் செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்கி றோம். இத்தகைய நல்ல முயற்சிகளை  மேற்கொண்டிருக்கும் முதலமைச்ச ருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.