14 ஆயிரம் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பதவி!
ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என தமிழ் நாட்டின் 14 ஆயிரம் உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளி களை நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான மசோதா, தமிழ்நாடு சட்டமன்றத்தில்
தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, இரண்டு மசோ தாக்களை தமிழ்நாடு சட்டப்பேர வையில் புதன்கிழமை (ஏப்.16) அன்று அறிமுகம் செய்து பேசினார். மாற்றுத்திறனாளிகளின் குரல், உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 27 அன்று அறிவித்தேன். அதன்படி தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்ட முன்வடிவு மூலம் தமிழ்நாட்டில் இருக் கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமை ப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள். இதை நடைமுறைப்படுத்துவ தற்காக தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, தமிழ்நாடு நகர்ப்புற ஊராட்சிகள் சட்டம் 1998 ஆகியவற்றில் திருத்தங்க ளை முன்மொழிந்து, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தாக்கல் செய்கிறேன். இதன் மூலம் மாற்றுத்திறனாளிக ளுடைய குரல் உள்ளாட்சி அமைப்பு களில் ஒலிப்பது மட்டுமல்லாமல், அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழி நடத்துகிற வல்லமை பெற்றவர்களா கத் திகழ்வார்கள். தற்போது நகர்ப்புற உள்ளாட்சிக ளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்க ளில் 35 பேர் மட்டுமே மாற்றுத்திறனாளி கள் உள்ளனர். ஆனால், இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, சுமார் 650 மாற்றுத் திறனாளிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், 12,913 மாற்றுத் திறனாளிகள் சிற்றூராட்சிகளிலும், 388 மாற்றுத் திறனாளிகள் ஊராட்சி ஒன்றி யங்களிலும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத் திறனாளிகளும் நியமனம் செய்யப்படுவார்கள். அவர்களது குரல் அந்த உள்ளாட்சி அமைப்புகளில் எல்லாம் எதிரொலிக்கும். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார். முதலமைச்சர் தாக்கல் செய்திருக் கும் இந்த சட்ட முன்வடிவுகள் நடப்புக் கூட்டத் தொடரின் இறுதி நாளான ஏப்ரல் 29 அன்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும். இதைத் தொடர்ந்து ஆளுநருரின் ஒப்புத லுக்காக உடனடியாக அனுப்பி வைக்கப்படும். ஆளுநர் அனுமதிய ளித்ததும் சட்டம் அமலுக்கு வரும்.