tamilnadu

img

ஜூலை முதல் வாரத்தில் தனியார் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கக் கோரிக்கை

 தரங்கம்பாடி, மே 24- தனியார் பள்ளிகளை ஜூலை முதல் வாரத்தில் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று நாகை மாவட்ட தமிழ்நாடு நர்சரி பிரைமரி, மெட்ரிக், மேல் நிலை, சி.பி.எஸ்.இ பள்ளி சங்க தலைவர் குடியரசு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகை யில், கடந்த மார்ச் 17 ஆம் தேதி முதல் கொரானா தொற்று காரண மாக பள்ளிகள் திறக்கப்படாத சூழ லில் உள்ளது. இந்த சூழலில் அரசு உத்தரவின்படி எல்.கே.ஜி முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாண வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறி விக்கப்பட்டுள்ளது. தற்போது வருகின்ற கல்வியாண்டை நடத்து வதற்கு ஏதுவாக தனியார் பள்ளி கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. வருகின்ற ஜூன் 15 முதல் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி பள்ளி மற்றும் தேர்வறைகள் தயார் நிலையில் உள்ளன.  இதனைத் தொடர்ந்து வரு கின்ற பள்ளி பருவத்தை தொட ங்குவதற்கு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன் னெச்சரிக்கை நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. ஒற்றை இலக்க வகுப்புகளை திங்கள், புதன், வெள்ளிக்கிழமை. இரட்டை இலக்க வகுப்புகளை செவ்வாய், வியாழன், சனி உள்ளிட்ட நாட் களில் வகுப்புகளை நடத்தினால் வகுப்பறைகளில் மாணவர்கள் இட நெருக்கடி இன்றி அமர்வ தற்கு போதுமான இடவசதியுடன் கூடிய வகுப்பறைகள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு வகுப்பு கள் இயக்க ஏதுவாக இருக்கும். மேலும் அரசு மறு உத்தரவு வரும் வரை பள்ளிகளில் விழாக்கள் உள் ளிட்ட எந்தவித நிகழ்ச்சியையும் நடத்தப்படுவதில்லை என்று உறுதியளிக்கப்படுகிறது.  எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மழலையர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் பள்ளி பரு வத்தில் தொடங்கினால் சிறந்த தாக இருக்கும் என்று கருதப்படு கிறது என்று கூறினார். மேலும் இக்கோரிக்கையை மனுவாக பள்ளி கல்வித் துறை அதிகாரி களுக்கு அனுப்பியுள்ளதாக கூறி னார்.