tamilnadu

img

திருவிழா கடை வியாபாரிகளுக்கு அரசு நிவாரணம் வழங்கக் கோரிக்கை

கும்பகோணம். ஜூன் 3--  தஞ்சை மாவட்ட திரு விழா கடை வியாபாரிகள் சங்கம் (சிஐடியு) அமைப்பு கூட்டம் முத்துகுமார் தலை மையில் கும்பகோணத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாவட்ட பொருளா ளர் எம் கண்ணன் சிறப்புரை  ஆற்றினார். சிஐடியு தொழிற் சங்கத்தில் 30  திருவிழாக் கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் சிஐடியு சங்கத்தில் இணைந்தனர்.  மாவட்ட திருவிழா கடை வியாபாரிகள் சங்க பொ றுப்பாளர்களாக ஜி கண்ணன் செயலாளராகவும் கிருஷ்ண மூர்த்தி தலைவராகவும் ஆர்.முருகேசன் பொரு ளாளராகவும் துணை செய லாளராக ராஜேந்திரன், சர வணன் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். கூட்டத்தில்  ஊரடங்கால் திருவிழாக்க ளை ரத்து செய்ததால் பாதிக்கப்பட்ட வியாபாரி களுக்கு தமிழக அரசு நிவாரண வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.