tamilnadu

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

ஒருதலைப்பட்சமாக செயல்படும் ஒன்றிய அரசு திருச்சி சிவா குற்றச்சாட்டு

நாமக்கல், ஏப். 8 – ஒன்றிய அரசின் தலைமைப்பொறுப்பில் உள்ள கட்சி அனைத்து மாநிலங்களையும் சமமாக பார்க்க  வேண்டும். ஆனால், ஒன்றிய பாஜக அரசு தமிழகத்தை  ஒரு தலைப்பட்சமாகவே பார்க்கிறது என திமுக எம்பி  திருச்சி சிவா குற்றம்சாட்டினார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், திமுக  சார்பில், ஒன்றிய இந்தி திணிப்பு, மாநில நிதி பகிர்வில் பாரபட்சம், பாராளுமன்ற தொகுதி சீரமைப்பில் அநீதி  ஆகியவற்றை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் மாநிலங் களவை உறுப்பினர் திருச்சி சிவா உரையாற்றினார். அவர் பேசுகையில், ”தனிப்பட்ட முறையில் ஒரு கட்சிக்கு இன்னொரு கட்சி மீது கோபதாபங்கள் இருக் கலாம். கருத்து வேறுபாடுகள் எல்லாம் இருக்கலாம்  விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அரசாங்கத்தின்  தலைமை பொறுப்பு ஏற்றவுடன் அந்த அரசாங்கம்  எல்லோரையும் பாரபட்சம் இல்லாத கண்ணோட் டத்தோடு பார்க்க வேண்டும். ஆனால் பல்வேறு வகை யில் தமிழக அரசை ஒன்றிய அரசு வஞ்சித்து வரு கிறது. ,மாநில நிதி பகிர்வில் மற்ற மாநிலங்களுக்கு ஒன்றுக்கு நான்கு மடங்காக நிதிகளை வாரி வழங் கும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதி  பங்கீட்டில் பாதிக்கும் குறைவாகவே தருகிறார்கள். தமிழகத்துக்கு நேர்மையற்ற விதமாக நிதி வழங்கப் படுவதாக தெரிவித்தார். “ஒன்றிய அரசுக்கு ரூ.100  வருமானம் கிடைத்தால், அதில் தமிழ்நாடு வழங்கு வது ரூ.9. ஆனால், திருப்பி வழங்கப்படுவது வெறும்  ரூ.4.08 மட்டுமே. இதே நேரத்தில், உத்தரப்பிரதேசம் ரூ.8 அளித்து ரூ.18 பெறுகிறது; பீகார் ரூ.2.75 அளித்து ரூ.10 பெறுகிறது. இது எதனை காட்டுகிறது?”. எனவே, தமிழகத்தை தொடர்ந்து புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக, வீரியமான போராட்டத்தை முன்னெடுப்பதே காலத்தின் கட்டாயம்,” என்றார்.

சிறுத்தையை காட்டிக்கொடுத்த வளர்ப்பு நாய்

வால்பாறை அருகே ரொட்டிக்கடை குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த சிறுத்தை ஒன்றை, அந்த வீட்டின் வளர்ப்பு நாய் குரைத்து காட்டிக்கொடுத்த சிசி டிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரொட்டிக்கடை எஸ்டேட் உயர்நிலைப் பள்ளிக்கு மேற்புறம் வசிக்கும் செல்வகுமார் மற்றும் சத்யா  தம்பதியரின் மகன் திங்களன்று மாலை 5 மணிய ளவில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந் தான். அப்போது, அவர்களின் வளர்ப்பு நாய் பலத்த  சத்தத்துடன் தொடர்ந்து குரைத்தது. அதே நேரத் தில், சிறுவன் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி னான். சத்தம் கேட்டு வெளியே வந்த செல்வகுமாரும், சத்யாவும் நாய்கள் தொடர்ந்து குரைப்பதைக் கண்டு  சந்தேகமடைந்தனர். உடனே, செல்வகுமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார். அதில், வீட்டருகே மறைந்திருந்த சிறுத்தை  ஒன்று நாயின் குரைப்பால் கோபமடைந்து ஆக் ரோஷமாக பாய்ந்து வந்துவிட்டு பின்னர் திரும்பிச் சென்றது பதிவாகியிருந்தது. இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. குடி யிருப்பு பகுதிக்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, குடியிருப்பு பகுதிக்கு வரும் சிறுத்தையைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வட்டி, அசல் செலுத்தியும் மிரட்டுவதாக புகார்

ஈரோடு, ஏப். 8 –  வாங்கிய கடனுக்கான வட்டி மற்றும் அசல் முழு மையாக செலுத்திய பிறகும் மிரட்டுவதாக கூறி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் ஈரோடு மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே உள்ள கூத் தம்பட்டி, ஜே.ஜே. நகரைச் சேர்ந்த பண்டாரம் மற்றும்  அவரது சகோதரர்கள் முருகேசன், பிரகாஷ் ஆகி யோர் திங்களன்று குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்த னர். அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டதாவது: “நாங் கள் பூம்பூம் மட்டுக்காரர் இனத்தைச் சேர்ந்தவர்கள். பூம் பூம் மாடு ஓட்டுதல், ஊசி, பாசி விற்பனை போன்ற சிறு  தொழில்கள் செய்து வருகிறோம். கடந்த 2013 ஆம்  ஆண்டு குடும்ப கஷ்டம் மற்றும் தொழில் செய்வதற் கான பணத் தேவைக்காக, எங்கள் பகுதியைச் சேர்ந்த  ஒருவரிடம் ரூ. 2 லட்சம் கடன் வாங்கினோம். கரோனா  காலம் உட்பட தற்போது வரை மாதந்தோறும் ரூ.20,000-க்கும் அதிகமாக செலுத்தி வந்துள்ளோம். இதுவரை அசல் மற்றும் வட்டியாக ரூ. 20 லட்சம் வரை  செலுத்தியுள்ளோம். எங்களது உழைப்பாலும், குழு வில் பெற்ற கடன் மற்றும் சொத்துக்களை விற்று வந்த  பணம் ஆகியவற்றின் மூலமாகவும் அனைத்து கடனையும் திருப்பிச் செலுத்திவிட்டோம். ஆனால், கடன் கொடுத்த நபர் இன்னும் ரூ. 65,000-க்கு மேல்  அசலும் வட்டியும் பாக்கி இருப்பதாகக் கூறி எங்களை மிரட்டுகிறார். எனவே, அவர் எங்களை மிரட்டு வதை தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.