அபாயகரமான நிலையில் கழிவுநீர் கால்வாய்கள்
பாப்பாரப்பட்டி புதூரில் அபாயகரமான நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சீரமைத்து, மக்கள் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந் துள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பேரூ ராட்சிக்குட்பட்ட 6 ஆவது வார்டில் உள்ள புதூர் பகுதியில், கழிவுநீர் கால்வாய்கள் மேல் அமைக்கப்பட்டுள்ள சிலாப்கள் மோசமான நிலையில் உள்ளது. இப்பகுதி மக்கள் அச் சத்திலேயே இப்பாதையை கடக்க வேண்டிய சூழல் உள்ளது. உடனடியாக சீரமைக்கக் கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வலியு றுத்தி வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியினர் கூறுகை யில், புதூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வருகின்ற னர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் குறைந்த அளவிலேயே உள்ளது. மேலும், புதூர் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. தெருக்களில் ஓடும் கழிவுநீர் கால்வாய்கள். அவற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சிலாப் கள் தரமற்ற முறையில் கட்டப்பட்டவையாக இருப்பதுடன், பலவற்றில் விரிசல்கள் ஏற் பட்டுள்ளன. சில இடங்களில் சிலாப்கள் முற்றி லும் உடைந்து கீழே விழுந்துள்ளன. இதனால் குழந்தைகள், பள்ளி மாணவர் கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைவரும் அச்சத்துடன், எந்நேரமும் விழுந்துவிடக் கூடும் எனும் பயத்தில் அந்தப் பாதைகளை கடக்கின்றனர். இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக எப் போது யார் விழுவார் என்கிற அச்சத்தி லேயே நாட்களை கடத்துகிறோம். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரி வித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிலாப்கள் அடித் தளமே இல்லாமல் சாய்ந்து காணப்படு கின்றன. ஏதேனும் விபத்து ஏற்பட்டால், பெரிய உயிரிழப்பு கூட நேரிடக்கூடும் என்ற னர். மேலும், இப்போதாவது நிர்வாகம் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, தரமற்ற சிலாப்களை அகற்றி, புதிய வலுவான மற் றும் பாதுகாப்பான சிலாப்கள் பதியப்பட வேண்டும். மேலும், சாலை மற்றும் கழிவுநீர் பாதைகளும் சீரமைக்கப்பட்டு, பொதுமக்க ளின் பாதுகாப்பும், வசதியும் பாப்பாரப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் என்றனர்.
இறைச்சி கடைகள் நடத்த உள்ளாட்சி நிபந்தனைபாதிக்கப்பட்ட வியாபாரிகள் முறையீடு
பெருந்துறை அருகே இறைச்சி கடைகள் நடத்த உள்ளாட்சி நிர்வாகம் விதிக்கும் நிபந்தனைகளால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகள், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தங்களுக்கு ஒரு தீர்வை வழங்க வேண்டும் என்று முறையிட்டுள்ளனர். இது தொடர்பாக ஈரோடு மே 5 அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரோடு மாவட்டம், விஜயபுரி மற்றும் மூங்கில்பாளையம் ஊராட்சிகளில் சுமார் 30 வியாபாரிகள் ஆடு, கோழி மற்றும் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த கடைகளில் உருவாகும் கழிவுகளை வியாபாரிகளே பராமரித்துக் கொள்ள வேண்டும் என்றும், தவறினால் கடைகளை திறக்கக் கூடாது என்றும் உள்ளாட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியது. இதன் காரணமாக கடந்த 2023 முதல் கடைகள் மூடப்பட்டன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவித்ததை அடுத்து, ஊராட்சிகளின் உதவி ஆணையரின் நேரடி மேற்பார்வையில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன. தொடர்ந்து, இறைச்சி கழிவுகளை அகற்றுவதற்கு இடவசதி வேண்டும் என்று ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தோம். ஆனால், இதுவரை எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த மார்ச் 17 ஆம் தேதியன்று பெருந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதில், இறைச்சிக் கழிவுகளை சாலையோரத்திலோ அல்லது நீர்நிலைப் பகுதிகளிலோ கொட்டக்கூடாது என்று அறிவித்தனர். இதையடுத்து, கழிவுகளை கொட்டுவதற்கு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இடம் கேட்டு மனு அளித்தோம். அதற்கு அவர்கள், வருவாய் துறையினர்தான் இடத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆகவே, மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினையை கவனத்தில் கொண்டு அப்பகுதியில் ஆய்வு செய்து, அனைத்து வகையான குப்பைகளையும் கொட்டுவதற்கும், அகற்றுவதற்கும் நிலம் ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.