tamilnadu

img

ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க  நிர்வாகிகளை அவமதித்த பெரம் பலூர் ஆட்சியரைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்திற்குள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள்  சங்கத்தினர் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் செவ்வாயன்று  நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவர் செந்தில் தலைமை  ஏற்றார். இதில், ஊரக வளர்ச்சி துறை ஓய்வூதியர் சங்கம் மாநில  துணைத்தலைவர் சுப்பிரமணியம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செய லாளர் பு.சுரேஷ், ஊரக வளர்ச்சி  துறை அலுவலர் சங்க மாநில  துணைத் தலைவர் ந.திருவரங்கன், பொருளாளர் வடிவேல் உள்ளிட்ட  திரளானோர் பங்கேற்றனர்.  தருமபுரி தருமபுரி திட்ட இயக்குநர் அலு வலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து ஊரக வளர்ச்சி துறை அலு வலர்கள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட  தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். இதில், முன் னாள் மாநில துணைத்தலைவர்  ஆர்.ஆறுமுகம், மாநில துணைத் தலைவர்  சா.இளங்குமரன், மாவட் டச் செயலாளர் தருமன், மாவட்டப்  பொருளாளர் வினோத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ், அரசு ஊழியர் சங்க  மாவட்டத் தலைவர் எம்.சுருளிநா தன், மாவட்ட செயலாளர் ஏ.தெய் வானை உள்ளிட்டோர் உரையாற்றி னர்.