வாலிபர் குத்திக் கொலை - 6 பேர் மீது வழக்குப்பதிவு
இருசக்கர வாகனங்கள் உரசியதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குனியமுத்தூர் சுண்ணாம்பு காலவாய் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் (24) என்பவர் கடந்த 6 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மற்றொரு வாகனத் துடன் உரசியது. இதனால் அசார் என்பவருடன் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அன்று இரவு இப்பிரச்சினையை பேசு வதற்காக அசாருதீனை, அசார் தரப்பினர் அழைத்தனர். முகமது அசாருதீன் தனது நண்பர்கள் மூன்று பேருடன் குனிய முத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதிக்குச் சென்றார். அங்கு அசார், தனது 10 நண்பர்களுடன் வந்துள்ளார். இரு தரப்பின ருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியதில் மோதல் ஏற்பட்டது. அப்போது, அசார் தரப்பினர் முகமது அசாரு தீனை வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். இதில், அவர் சிகிச்சை பலனின்றி செவ்வா யன்று உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீ சார் வழக்குப்பதிவு செய்து, குற்றம்சாட்டப்பட்ட அசார், மன் சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன் மற்றும் முகமது ரபீக் ஆகிய 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பணி வழங்கக் கோரி போக்குவரத்து ஓட்டுநர், நடத்துநர்கள் மனு
ஈரோடு, ஏப். 8 - தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மாவட்ட ஆட்சியரிடம் பணி வழங்கக் கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டதாவது: “கடந்த ஜனவரி 9 ஆம் தேதி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தபோது, நாங்கள் தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்களாக பணியில் சேர்ந்தோம். விடுமுறை கூட எடுக்காமல் தொடர்ந்து தற்காலிகமாக பணியாற்றினோம். எங்களில் பலர் இதற்கு முன்பும் தற்காலிகமாக ஓட்டுநர், நடத்துநர் பணி செய்தவர்கள். பலர் 180 முதல் 190 நாட்கள் வரை பணியாற்றி யுள்ளோம். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கு வேலை இல்லை என்று கூறி வெளி யேற்றி விட்டனர். இதற்கிடையில், கடந்த மார்ச் 21 ஆம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஓட்டுநர் உரிமத்துடன் நடத்துநர் உரிமமும் இருந்தால் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்க ளால் அந்த பணிக்கு விண்ணப்பிக்க இயலவில்லை. எங் களைப் போல பல ஓட்டுநர்கள் அல்லது நடத்துநர்க ளுக்கு ஒரு உரிமம் மட்டுமே இருப்பதால், பணி வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே, நாங்கள் ஏற்கனவே பணி யாற்றியவர்கள் என்பதையும், எங்கள் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, எங்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.