வேலூர், ஆக. 16- இந்திய தொழிற்சங்க மையத்தின் வேலூர் மாவட்ட 12ஆவது மாநாடு குடியாத்தம் நகரில் தோழர் வி.இ.ஏகநாதீஸ்வரன் நினைவரங்கில் மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நாகேந்திரன் தலைமையில் வந்த கொடியினை எம்.காசி பெற்றுக் கொண்டார். சங்க கொடி யினை மாவட்ட துணைத்தலைவர் ஏ.பாபு ஏற்றினார். வரவேற்புக் குழுத் தலைவர் பி.காத்தவராயன் வரவேற்றார். எஸ்.செல்வி அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு மாநாட்டை துவக்கி வைத்து பேசி னார். மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன் வேலை அறிக்கையையையும், பொருளாளர் ஏ.பழனியப்பன் வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ப.சக்திவேல், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வ.அருள் சீனிவாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டை நிறைவு செய்து மாநில துணைத் தலைவர் எம்.சந்திரன் பேசினார்.
நிர்வாகிகள்
தலைவராக எம்.பி .ராமச்சந்திரன், செய லாளராக எஸ்.பரசுராமன், பொருளாளராக ஏ.பழனியப்பன் உள்ளிட்ட 17 பேர் நிர்வாகி களாக தேர்வு செய்யப்பட்டனர். பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 வழங்க வேண்டும், வருங்கால வைப்புநிதி உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.4,000 வழங்க வேண்டும், டேனரி மற்றும் ஷூ தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ, பி.எப். உள்ளிட்ட சட்ட உரிமை களை நடைமுறைப்படுத்த வேண்டும், டேனரி கழிவுகளை உரிய காலங்களில் பாதுகாப்பு டன் அகற்றவும், உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கைத்தறி ரகங்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியினை முழுமை யாக ரத்து செய்ய வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதவை திரும்பப் பெற வேண்டும், மின் நுகர்வோரையும், மின் ஊழியர்களையும் கடுமையாக பாதிக்கும் மின்சார சட்ட மசோதா 2018-ஐ திரும்பப் பெற வேண்டும், கேரளாவைப் போல் தமிழகத்தி லும் எல்ஐசி முகவர்களை சேமநல நிதி திட் டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக புதனன்று (ஆக. 14) குடி யாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது.