districts

img

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் சிஐடியு கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, செப் 13. பெண் தொழிலாளர்க ளின் பாதுகாப்பை உறுதிப் படுத்த வேண்டும் என சிஐடியு கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு வலியுறுத் தியுள்ளது. சங்கத்தின் 12ஆவது மாவட்ட மாநாடு ஓசூரில் டி.என்.நம்பிராஜன் நினை வரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜி.கே. நஞ்சுண்டன் சங்க கொடியை ஏற்றினார். துணைச் செயலாளர் வாசு தேவன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநில துணைப் பொதுச்  செயலாளர் வி.குமார் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் என்.ஸ்ரீதர் வேலை அறிக்கையையும், பொருளாளர் பீட்டர் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.  முன்னதாக ஓசூர் பெரி யார் நகர் ரவுண்டானாவில்  இருந்துமாநாட்டு பேரணி துவங்கியது.
தீர்மானங்கள்
ஓசூரைச் சுற்றியுள்ள தனியார் தொழிற்பேட்டை பகுதிகளில் உள்ள  அனைத்து தொழிற்சாலை களில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப் படுத்த வேண்டும், நகராட்சி, மாநகராட்சி, மின்சார வாரியத்தில் 10  ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை, தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும்,  தூய்மைப் பணியாளர்க ளின் வேலை நேரத்தை முறைப்படுத்தி தோறும் மாதம் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், ஆ்ன்லைன் பதிவை எளிமைப்படுத்த வேண்டும், நடைபாதை கடைகளில் வரி வசூலிக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எஸ்.வாசுதேவன், செயலா ளராக என்.ஸ்ரீதர், பொருளா ளராக ஜி.ஸ்ரீதரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.