court

img

பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கம் - ஆகஸ்ட் 12-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கத்திற்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் 12-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
பீகாரில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் மாதத்திற்குள் நடைபெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 23-ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளிட்டுள்ள அறிக்கையின்படி, 53 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த 2 நாட்களில் மேலும் 12 லட்சம் வாக்காளர்ளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதன்மூலம் நீக்கம் செய்யப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 65.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கத்திற்கு எதிரான மனுக்களை ஆகஸ்ட் 12, 13 ஆகிய தேதி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜாய்மல்யா பக்ச்சி ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.