districts

வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் விவசாயிகள் சங்க வட்ட மாநாடு வலியுறுத்தல்

பெரம்பலூர், ஆக.6 - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை  வட்ட மாநாடு சனிக்கிழமை வேப்பந்தட்டை காந்தி மஹாலில் நடை பெற்றது. மாவட்ட துணைத்தலைவர் சி.கோவிந்தன் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் ஆர்.சாமிதுரை, செய லாளர் பி.ராமச்சந்திரன், துணைதலை வர் எ.செங்கமலை ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்ட செயலாளர் என்.செல்லதுரை  கோரிக்கைகளை விளக்கி சிறப்புரை யாற்றினார். மாவட்ட தலைவர் ஏ.கே.ராஜேந்திரன் நிறைவுரை ஆற்றினார்.  பச்சைமலை கல்லாறு, சின்ன முட்லு நீர்த்தேக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். வேப்பந்தட்டையில் வேளாண் கல்லூரி அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். கால்நடை  பராமரிப்பிற்கு மானிய விலையில்  தீவனம் வழங்கி பால் உற்பத்தியா ளர்களுக்கு பால் மாட்டு கடன் வழங்க  வேண்டும். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வெள்ளுவாடி பள்ளி குழந்தைகள் உரிய பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். உடனே பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.  தோட்டக்கலை மின் இணைப்பு களை இலவச மின்சாரமாக மாற்றித் தர  வேண்டும். மதிப்புகூட்டு பொருள் தயாரிக்க வங்கிகள் மூலம் விவசாயி களுக்கு பாரபட்சமின்றி கடன் உதவி கள் வழங்க வேண்டும். மாடுகளுக்கு கோமாரி மற்றும் அம்மை நோய் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.