கடலூர், அக். 1- நிதிபதிகள் காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க கடலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது. சங்கத்தின் மாவட்ட மாநாடு தலைவர் எம். ஜோதிலிங்கம் தலைமை யில் விருத்தாசலத்தில் நடை பெற்றது. சங்கக் கொடியை வழக்கறிஞர் அம்பேத்கர் ஏற்றினார். மாவட்டப் பொருளாளர் என்.ஆர்.ஆர்.சங்கரய்யா வரவேற்றார். மாநிலத் துணை தலை வர் சங்கரன், மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம், மூத்த வழக்கறிஞர்கள் தில்லைவானன், பூமாலை குமாரசாமி, பாலச்சந்தர், விஸ்வேஸ்வரன், செல்வபாரதி, இளைய ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விருத்தாசலம் நீதிமன்ற கிளைச் செய லாளர் வி.ராஜ்மோகன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
நீதிமன்றங்களில் பணி யாற்றும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வழக்க றிஞர் பாதுகாப்பு சட்டம் 2021ஐ உடனடியாக அமல் படுத்த வேண்டும், அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.50 ஆயிரத்தி லிருந்து ரூ 5 லட்சமாக உயர்த்த வேண்டும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். நீதிபதிகள் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும், விருத்தா சலம் நீதிமன்றத்தில் கிளை அஞ்சலகம் திறக்க வேண்டும், விருத்தாசலம் நீதிமன்றம் முன்பு வேகத் தடை அமைக்க வேண்டும், எஸ்சி, எஸ்டி வழக்க றிஞர்களுக்கு வழங்கப் படும் ஊக்க தொகையை நிறுத்தாமல் தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
25 பேர் கொண்ட மாவட்ட குழுவிற்கு தலைவராக எம்.ஜோதி லிங்கம், செய லாளராக கே.எம் குமரகுரு, பொரு ளாளராக என்.ஆர்.ஆர்.சங்கரய்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.