tamilnadu

img

தூத்துக்குடியில் காற்றின் தரத்தில் முன்னேற்றம்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கடந்த இரு ஆண்டுகளைக் காட்டிலும் காற்று மாசு பன்மடங்கு குறைந்திருப்பதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.438 ஆலைகள் இயங்கி வரும் தூத்துக்குடியில் சிப்காட், ஏ.வி.எம். கட்டிடம் மற்றும் ராஜா ஏஜென்சீஸ்ஆகிய 3 இடங்களில், காற்றின் தரத்தைகண்காணிக்கும் நிலையங்கள் உள்ளன. இதில் சிப்காட் மற்றும் ராஜாஏஜென்சீஸ் ஆகிய இரு இடங்கள் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளிலும், ஏ.வி.எம். கட்டிடம்., குடியிருப்பு கள் மற்றும் ஆலைகள் நிறைந்த பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதால், அந்தந்த நிலையங்கள், அந்தந்த பகுதிகளில் காற்றின் தரத்தை ஆய்வு செய்கின்றன. தூத்துக்குடி அனல் மின் நிலையம், வ.உ.சி. துறைமுகம் ஆகிய இடங்கள்ராஜா ஏஜென்சீஸ் அருகே இயங்கி வருகின்றன. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை சிப்காட் நிலையத்தின் கண்கா ணிப்பு வளையத்தில் இடம்பெற்றுள் ளது. இந்த நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளின் அடிப்படையில், தூத்துக்குடியில் காற்றின் தரம் மேம்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ராஜா ஏஜென்சீஸ் நிலையத்தில் பதிவான புள்ளிவிவரங்களின் படி, 2017-ல் எடுக்கப்பட்ட மாதிரிகளில் காற்றின் தரம் 2.08 விழுக்காடு மட்டுமே திருப்திஅளிக்கும் வகையில் இருந்ததாகவும், இது கடந்த 2018-ல் 23.23 விழுக்காடாகவும், இந்த ஆண்டில் 49.23ஆகவும் உயர்ந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் சிப்காட் நிலையத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் காற்றின் தரம் 81.53 விழுக்காடு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும், ஏவிஎம் கட்டிட நிலையத்தில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் காற்றின் தரம் 77.27 விழுக்காடு திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.