ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டுக்கு அந்நாட்டு தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.
இஸ்லாமிய சட்டத்தின் கீழ் செஸ் விளையாட்டு சூதாட்டத்தின் ஒரு வடிவமாக இருக்கிறதாக ஆட்சேபனைகள் எழுந்துள்ளதாகவும், இந்த ஆட்சேபனைகள் தீர்க்கப்படும் வரை, ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும் எனவும் விளையாட்டுத் துறை இயக்குநரக செய்தித் தொடர்பாளர் அடல் மஷ்வானி தெரிவித்துள்ளார்.