tamilnadu

img

உலக செவிலியர் தினம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலக செவிலியர் தினத்தையொட்டி, செவிலியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக செவிலியர் தினம் ஒவ்வொரு ஆண்டும், புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே 12 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், செவிலியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி-மதம்-நிறம் என எதைப் பற்றியும் சிந்திக்காமல் அனைவரையும் ஒன்றுபோலக் கருதி, அன்புடன் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களான செவிலியர்கள் அனைவருக்கும் International Nurses Day வாழ்த்துகள்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.