புதுதில்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, ஞாயிறன்று திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். இந் நிலையில். மன்மோகன் சிங் உடல் நிலையில் நல்லமுன்னேற்றம் காணப்படுவதாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக்குழு அறிவித்துள்ளது. 87 வயதாகும் மன்மோகன் சிங். ஒரு தேர்ந்த பொருளாதார வல்லுநர் ஆவார். 2004 முதல் 2014 வரை பத்தாண்டுகள் அவர் பிரதமர் பதவியை வகித்துள்ளார்.