tamilnadu

img

பிரதமர் மோடியின் பேச்சில் கவனம் வேண்டும்....

புதுதில்லி:
எல்லையில் சீனப் படைகள் ஊடுருவவில்லை; இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை என்று, அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. விவாதமாகவும் அது மாறியது.“ஊடுருவலோ, ஆக்கிரமிப்போ நடக்கவில்லை என்றால், பின்னர் எதற்காக எல்லையில் சீனாவுடன் மோதல் நடந்தது; 20 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தார் கள்?” என்று எதிர்க்கட்சிகள் கேள்விகள் எழுப்பின.மோதலுக்கு பின்னர் ஊடுருவலோ, ஆக்கிரமிப்போ இல்லை என்றுதான் பிரதமர் கூறினார் என அரசு விளக்கம் அளித்தாலும், அது சமாளிப்பாகவே பார்க்கப் பட்டு வருகிறது. 

“அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சீனா உடனான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்தியப் பிரதமர் பேசியிருக்கிறார்” என்று சீன ஊடகங்கள் தெரிவித்த பாராட்டும் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.இந்நிலையில், முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயக நாட்டில் அனைத்து முடிவுகளையும் எடுக்கவேண்டிய நிலையில் பிரதமர் இருக்கிறார். அந்த வகையில், பிரதமர் தனது சொற்களிலும், நமதுதேசத்தின் பாதுகாப்பு, கொள்கைகள் மற்றும் பிராந்திய நலன்களிலும் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும்; பிரதமரின் வார்த்தைகள் சீனாவுக்கு பயன்பட்டுவிடக் கூடாது” என்று கூறியுள்ளார்.“கடந்த ஏப்ரல் 2020ல் இருந்து பல்வேறு ஊடுருவல்களின் மூலம்கல்வான் பள்ளத்தாக்கு மற்றும்பாங்காங் சோ ஏரி உள்ளிட்டவற்றை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா முறைகேடாக சொந்தம்கொண்டாடி வருகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு நாம்ஒருபோதும் கீழ்ப்படியக் கூடாது”என்றும் மன்மோகன் சிங் குறிப் பிட்டுள்ளார்.