states

img

உத்தரகாண்ட் மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மான்சா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மான்சா தேவி கோயிலில் இன்ரு காலை ஞாயிறு சுமார் 9.30 திடீரென கடும் கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிம் பேசிய ஹரித்வார் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் ப்ரமேந்திர சிங் டோபால்; கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டின் தொடக்கத்தில் மின்சாரம் கசிந்ததாக ஒரு வதந்தி பரவியதால் பக்தர்கள் பீதி அடைந்து பரபரப்பாக ஓடியதால் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.